2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சரத்குமாரவுக்கு பிணை

Niroshini   / 2016 நவம்பர் 07 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதியமைச்சர் சரத்குமார குணரத்ன, நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று (07) 50,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2002ஆம் ஆண்டில் நீர்கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியில் கலந்து கொண்டிருந்த இருவர் காரில் மோதி பலியான சம்பவம் தொடர்பில் சரத்குமார குணரத்ன மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து, சரத்குமார குணரத்னவுக்கு எதிராக நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் 24ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

இதையடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், இன்று நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .