2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

சரத் அமுனுகம இராஜினாமா

Editorial   / 2024 மே 29 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோரின் கட்சிகள் உள்ளிட்ட மேலும் சில தரப்பினருடன் திங்கட்கிழமை (27) கூட்டணி அமைத்துக்கொண்ட திலித் ஜயவீரவின் மவ்பிம ஜனதா கட்சியின் தவிசாளர் கலாநிதி சரத் அமுனுகம, அந்த கட்சியிலிருந்து செவ்வாய்க்கிழமை (28)  இராஜினாமா செய்துள்ளார். 

தாம் கட்சியிலிருந்து இராஜினாமா செய்வதாக மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவிற்கு  அறிவித்ததாக   சரத் அமுனுகம தெரிவித்தார். 

எனினும், தமது  இராஜினாமாவிற்கான காரணத்தை  அவர் தெரிவிக்கவில்லை.

தாம் திலித் ஜயவீரவிற்கு வாழ்த்துத் தெரிவித்து, கட்சியிலிருந்து விலகியதாக கலாநிதி சரத் அமுனுகம கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X