Editorial / 2017 ஒக்டோபர் 06 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வா, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நிராகரிக்கக் கோரி, இன்று (06) மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட, மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்தை, இரத்துச்செய்யுமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில், கடந்த மாதம் 28 ஆம் திகதியன்று அவர் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த திருத்தச் சட்டமூலமானது, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முறைமை தவறானது என்றும் அந்தத் திருத்தத்தை உடனடியாக இரத்துச்செய்யுமாறே, அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
அந்த மனுவில், சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இந்த மனுவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்துள்ளார்.
32 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
3 hours ago