Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 18 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு வருகைதந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், பல்வேறு மட்டங்களினான பேச்சுவார்த்தைகளை இன்று (18) ஆரம்பிக்கவுள்ளனர்.
206 மில்லியன் அமெரிக்க டொலருக்கான கடன் வரையறைக்காலத்தைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பிலான தீர்மானத்தை எட்டுவதற்கே, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், இலங்கைக்கு வருகைதந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், இலங்கை மத்திய வங்கி, திறைச்சேரி மற்றும் நிதியமைச்சு ஆகியனவற்றின் பிரதிநிதிகளுடன் தங்களுடைய பேச்சுவார்த்தைகள் இன்று ஆரம்பிப்பர்.
இலங்கைக்கு, கடன் வரையறைக்காலத்தை வழங்குவதற்கான இயலுமை தொடர்பில், இந்தப் பேச்சுவார்த்தைகளின் பின்னரே பரிந்துரைக்கப்படவுள்ளதென அறியமுடிகின்றது.
சர்வதேச நாயணய நிதியம், இலங்கைக்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருந்த கடன் வசதிகளில், நான்கு வரையறைக்காலங்கள் நிறைவடைந்துவிட்டன. அதில், ஐந்தாவது வரையறைக்காலம் கடந்த நவம்பர் மாதம் வழங்கப்படுவதற்கு ஏற்பாடாகியிருந்தது.
எனினும், ஒக்டோபர் இறுதியில் ஏற்பட்ட அரசமைப்பு நெருக்கடி காரணமாக, ஐந்தாவது வரையறைக்காலத்தை கைவிடுவதற்கு சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்தது. இந்நிலையில், அரசமைப்பு நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட்டதன் பின்னர், அந்த கடன்வரையறைக்காலத்தை, சர்வதேச நாணய நிதியத்திடம், அரசாங்கம் கோரியிருந்தது.
அந்த கோரிக்கையை பரிசீலித்து, அதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கே, சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகள், இரண்டுவாரகால விஜயத்தை மேற்கொண்டு கடந்த 15 ஆம் திகதியன்று நாட்டை வந்தடைந்தனர்.
சர்வதேச நாணய நிதியமானது நான்கு, வரையறைக்காலங்களுக்குள், 1,000 மில்லியன் அமெரிக்க டொலர்களை, இலங்கைக்கு கடனாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
56 minute ago
1 hours ago