2026 மே 11, திங்கட்கிழமை

dd

‘சர்வாதிகார குடும்ப ஆதிக்கம் இல்லை’

Editorial   / 2019 ஜூலை 09 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வாதிகார குடும்ப ஆதிக்கம் ஐக்கிய தேசியக் கட்சியில் இல்லையென்று இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க  தெரிவித்துள்ளார்.

அந்தப் பக்கத்தில் அனைத்து விடயங்களுக்கும் ராஜபக்‌ஷக்களே உள்ளனர். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியில் விக்ரமசிங்க, கமகே, ரணவக்க, ஜயசூரிய, பிரேமதாஸ என பலர் உள்ளதாகவும் அவர், தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை அலரி மாளிகையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடலின் பின்னர், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தப் போதே, இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நால்வரும் மொட்டைச் சேர்ந்த  மூவரும் மாக்கந்துர மதூஷுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் இவர்கள் தொடர்பான உண்மையான விடயங்கள் எதிர்காலத்தில் உரியமுறையில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .