2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.3 மில்லியனைத் தாண்டியது

Simrith   / 2025 ஜூலை 31 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த ஆண்டு இதுவரை 1.3 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.

ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜூலை 27 ஆம் திகதி வரை மொத்தம் 1,341,953 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக SLTDA தெரிவித்துள்ளது. 

இந்தப் பயணிகளில் பெரும்பாலோர் இந்தியர்கள், எண்ணிக்கை 274,919. 

மேலும், இங்கிலாந்து, ரஷ்யா, ஜெர்மனி, சீனா, பிரான்ஸ் , அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் கணிசமான எண்ணிக்கையில் வந்துள்ளனர்.

SLTDA தரவுகளின்படி, ஜூலை 27 நாட்களுக்குள் 173,909 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். 

மேலும், அந்த மாதத்தில் அதிகபட்ச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஜூலை 26 ஆம் திகதி பதிவாகியுள்ளதுடன் , அது மொத்தம் 7,579 வருகைகள் ஆகும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .