Janu / 2026 பெப்ரவரி 22 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் தில்லையடி, அல்-காசிம் கிராமத்திற்கு அருகில் வீதியோரத்தில் இருந்து முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (22) அன்று மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் தில்லையடி பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 72 வயதுடைய அப்துல் லத்தீப் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் சனிக்கிழமை (21) இரவு வீட்டில் இருந்தபோது, வாடகை சவாரி (Hire) ஒன்றுக்குச் செல்வதாகக் கூறி இனந்தெரியாத ஒருவரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவர் காலை வரையிலும் வீடு திரும்பாத நிலையில், அவரது மருமகன் புத்தளம் தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில், அவரது வீட்டிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடப்பனாவில்லு கிராமத்திற்குச் செல்லும் வீதியின் வடிகான் ஒன்றில் சடலம் கிடப்பதைக் கண்ட ஒருவர் கிராமவாசிகளுக்கு அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பொலிஸாரிடம் வழங்கிய தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வாடகை சவாரிக்குச் செல்வதாகக் கூறி அழைத்து வந்த நபரே இக்கொலையை செய்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago