Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 செப்டெம்பர் 03 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா கல்முனை மேல் நீதிமன்றில் முன்னிலையான நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆந் திகதி வரை மீள் வழக்கு விசாரணைக்கான மறு தவணை இடப்பட்டுள்ளது.
இது குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (2) விசாரணைக்கு வந்தபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் தொடர்ச்சியாக இரு நாட்கள் (1.09.2025-2.09.2025) உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியா ஆஜர்படுத்தப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் இவ்வாறு மன்றில் முன்னிலையான சஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியாவிடம் இதுவரை காலமும் இடம்பெற்ற வழக்கின் நிகழ்ச்சி குறிப்புகளில் திருத்தம் மேற்கொள்வது குறித்து ஆராயப்பட்டுள்ளன.
குறித்த அவரது வழக்கு தொடர்பான விசாரணை குறிப்புகளில் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக மன்றிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தில் மனுதாரர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்சி ஹேரத்தும் அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரனும் மன்றில் ஆஜராகி இருந்தனர். இதன்போது தமிழ் மற்றும் சிங்கள குறிப்புகளில் காணப்பட்ட வேறுபாடுகளை சுட்டிக்காட்டிய அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரர் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள நீதிமன்றத்தின் அனுமதியை கோரி இருந்தார்.
பிரதிவாதியான சஹ்ரான் ஹாசிமின் மனைவி பாத்திமா ஹாதியா சார்பில் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி ஷரீப் சலாவுதீன் இதன் போது எதுவித ஆட்சேபனையும் தெரிவிக்க வில்லை.அத்துடன் குறித்த விசாரணை குறிப்புகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நேரத்தை கருத்தில் கொண்டு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆந் திகதி வரை மீள் வழக்கு விசாரணைக்கான மறு தவணை இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
31 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
31 minute ago
1 hours ago
1 hours ago