Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Mayu / 2024 பெப்ரவரி 13 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடைகளில் வாங்கும் குளிர்பானங்கள் , சிப்ஸ் பாக்கெட் அல்லது உணவகத்தில் வாங்கி வரும் சாப்பாட்டில் பூச்சிகள், புழுக்கள் இருப்பதை சாப்பிட்டு உடல்நலக் குறைபாடு ஏற்படும் பல சம்பவங்களை இதற்கு முன் பலமுறை கேட்டோ பார்த்தோ இருப்போம். இதேபோன்ற சம்பவம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரொபின் ஜேக்குயூஸ் என்ற நபர் ஹைதராபாத்தின் மெட்ரோ நிலையத்திலுள்ள கடையில் சாக்லேட் வாங்கியிருக்கிறார். அதை சாப்பிடும் போதுதான் சாக்லேட்டில் புழுக்கள் நெளிவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
சாக்லேட்டில் புழு இருப்பதை அவதானித்த ரொபின், அமீர்பெட் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள ரத்னாதீப் கடையில் தான் வாங்கியதற்கான பில்லையும் உடனடியாக வீடியோவாக எடுத்து, இதுபோன்ற சுகாதாரப் பிரச்னைகளுக்கு யார் பொறுப்பு? பொருட்களுக்கு தரப் பரிசோதனை எல்லாம் செய்ய மாட்டார்களா என கோபமாக கேட்டு X ல் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவின் கீழ் பல பதிவர்கள் தங்கள் கவலைகளை தெரிவித்து வருகின்றனர். இது போல மோசமான பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
6 hours ago