2026 மே 01, வெள்ளிக்கிழமை

சாரதிகள் இருவருக்கும் விளக்கமறியல்

Editorial   / 2021 மார்ச் 21 , பி.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பசறையில் தனியார் பஸ் விபத்துக்கு காரணமான சந்தேக நபர்களான சாரதிகள் இருவரும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

தனியர் பஸ்ஸொன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது என்பதை கண்டுகொண்டே தப்பியோடி தலைமறையாகி இருந்த டிப்பர் ரக வாகனத்திச் சாரதி மற்றும் தனியார் பஸ்ஸை செலுத்திச்சென்ற சாரதி ஆகிய இருவரும் பதுளை பதில் நீதவான் சுஜீவன சில்வாவின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான பஸ்ஸின் சாரதி ​கே.ஆர் நிஹால் சந்திரகாந்தன் மற்றும் டிப்பரின் சாரதி பதுளை ஹதகொடவை வசிப்பிடமாகக் கொண்ட திஸாநாயக்கலாகே சந்திரகுமார் ஆகிய இருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த பஸ்ஸின் சாரதி, பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார். வைத்தியசாலைக்கு சென்றே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .