Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2017 ஜூன் 23 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா திபான்
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரால், உயர்நீதிமன்றத்தில், தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு வாபஸ் பெற்றுக்கொள்ள ப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தில், ஞானசார தேரர் சார்பில் நேற்று (22) ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி திரந்த வலலியத்த, மேற்கண்டவாறு அறிவித்தார்.
இந்த மனுக்கான ஆதாரம் சேர்ப்பதற்கான தினமான நேற்றையதினம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், நீதியரசர்களான உபாலி அபேரத்ன, விஜித் கே மலல்கொட ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டத்தரணி வலலிலயத்த மேற்கண்ட அறிவிப்பை விடுத்தார்.
தமது சேவை பெறுநருக்கு எதிரான வழக்குகளிலிருந்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதால், அவரைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரியும் கைது செய்வதற்கான நகர்வுகளுக்கு எதிராகவும், இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரியும், தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அவர் அறிவித்தார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான பிரிவே, தன்னைக் கைதுசெய்வதற்கு முயல்வதாகவும் அந்தப் பிரிவு, இனவாத விரோதத்தைத் தூண்டுவது தொடர்பிலே தனது விசாரணையை ஆரம்பித்தாகவும் முறையான விசாரணைகளை முன்னெடுக்காமல், கைதுசெய்வதற்கு அப்பிரிவு முயல்வதாகவும் கடந்த 13ஆம்
திகதி தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவருடைய சட்டத்தரணியான திரந்த வலலியத்த ஊடாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் உட்பட நால்வர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago