2025 மே 08, வியாழக்கிழமை

சாரைப்பாம்பை சாப்பிட்டவர் கைது

Janu   / 2024 ஜூன் 12 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாரைப்பாம்பு ஒன்றை அடித்து கொன்று, அந்த பாம்பின் தோலை உரித்து துண்டு துண்டாக வெட்டி சமைத்து சாப்பிட்ட சம்பவம் தொடர்பில், திருப்பத்தூர் அருகே உள்ள பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்தவர் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 பாம்பின் தோலை உரித்து, தண்ணீரில் அலசும் காட்சிகளை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக .வலைத்தளங்களில் வைரலாக பரவியது, அவர் மீது வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், சாரைப்பாம்பை சமைத்து சாப்பிட்டதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X