2025 ஜூலை 16, புதன்கிழமை

சிகரெட்டுகளுடன் சீனப்பிரஜைகள் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 06 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவிலிருந்து சட்டவிரோதமாக ஒரு தொகை சிகரெட்டுகளை,  இலங்கைக்குக் கடத்தி வந்த இரண்டு சீனப் பிரஜைகள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். 

32 மற்றும் 36 வயதுடைய இரண்டு சீனப் பிரஜைகளே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என, சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன  தெரிவித்தார்.

அவர்களின் பயணப் பொதியிலிருந்து, 220 பக்கட்டுகளில் அடைக்கப்பட்ட சுமார் 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான 44,000 சிகரட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. 

கைப்பற்றப்பட்ட சிகரட்டுகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் இருவரும் எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .