Editorial / 2026 மார்ச் 22 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிலாபம், கக்கப்பள்ளிய சந்தியில் உள்ள சிகையலங்கார நிலையமொன்றில் சிறுவன் ஒருவன் மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்த அதிர்ச்சியூட்டும் காணொளி சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின்படி, குறித்த சிகையலங்கார நிலையத்திற்கு முடி திருத்துவதற்காக வந்த சிறுவன் மீது இந்த துஷ்பிரயோக முயற்சி கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சிலாபம் பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட தேடுதலில், கக்கப்பள்ளிய மற்றும் பண்டாரவத்தை ஆகிய பகுதிகளில் வைத்து இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 54 மற்றும் 58 வயதுடைய கக்கப்பள்ளிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இன்றைய தினம் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
44 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago