2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘சிங்கள பௌத்தர்களுக்கு துரோகம் செய்யவில்லை’

Editorial   / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘நாட்டைக் காட்டிகொடுக்கும் எண்ணம் தனக்கு ஒருபோதும் வந்ததில்லையெனத்  தெரிவித்த  முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ, சிங்கள பௌத்தர்களுக்கு தான் ஒருபோதும் துரோகம் செய்யவில்லை’ என்றார்.

அநுராதபுரத்தில் நேற்று  (29)நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துரைத்த அவர், தான் எதிர்க்கட்சியில் இருந்தபோது, இலங்கை மீது, சர்வதேச அழுத்தங்கள் பெருமளவில்  காணப்பட்டன. அந்தத் தருணங்களில்  தான் எதிர்ப்பை  வெளிப்படுத்தியதாகத் தெரிவித்தார்.

இவ்வாறிருக்க, 69இலட்சம் பேர், பொருள்களின்  விலை குறையும் என்ற நம்பிக்கையில் புதிய ஆட்சியை உருவாக்கியயுள்ளனர் எனத் தெரிவித்த அவர், அரச அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு 4 வருடங்கள் கடந்த பின்னர்,  முன்னைய அராசாங்கத்தை விட  குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருள்களை வழங்க முடிந்தது என்றார்.

அவ்வாறானதொரு அரசியல் வ​ரலாறு இதற்கு முன்னர்  இலங்கையில் ஒருபோதும் இருந்ததில்லை எனத் தெரிவித்த அவர்,  இன்று ஜனாதிபதித்  தேர்தல் முடிந்த உடன்  அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் பெருமளவில் அதிகரித்துவிட்டன என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .