Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 06 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பான் இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம், இலங்கை வாகன இறக்குமதியாளர்களுடன் இணைந்து, நேற்று (05) கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டலில் நடத்திய சினேகபூர்வ சந்திப்பில், பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டிருந்தார்.
ஜனாதிபதி, அண்மையில் ஜப்பானுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின்போது, ஜனாதிபதியைச் சந்தித்த, ஜப்பானில் வாழும் இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள், இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்யும்போது முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள் தொடர்பில், அவர்களது கருத்துகள், முன்மொழிவுகளை, ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்தனர்.
அக்கருத்துக்களை நிதியமைச்சுக்கும் வரவு-செலவுத் திட்ட தயாரிப்பின்போது, கவனத்தில் கொள்வதற்கும் முன்வைப்பதற்கு, ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கைக் குறித்து ஜப்பான் பாராட்டுத் தெரிவித்திருந்தது. இலங்கை வாகன ஏற்றுமதியாளர்களின் சங்கங்கத்தினர், ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னமொன்றையும் வழங்கி வைத்தனர்.
ஜப்பான், இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்க உறுப்பினர்களையும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்க உறுப்பினர்களையும் பாராட்டி, ஜனாதிபதி விசேட நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்தார்.
ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் தம்மிக்க கங்கானாத் திசாநாயக்க உள்ளிட்ட உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago