Editorial / 2019 செப்டெம்பர் 06 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றுமொரு தடவை ஐக்கிய தேசியக் கட்சியின் நிழலில் கீழ் செல்ல மாட்டார் என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் இன்று (06) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தமது ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்கவுள்ளமை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, அவ்வாறான தீர்மானமொன்றைக்கூட எடுக்க முடியாவிட்டால், அந்தக் கட்சி சாதகமற்ற அரசியல் கட்சியாகவே கணிக்கப்படும் என, குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என, தெரிவித்த அவர், இந்த பேச்சுவார்தை தோல்வியில் நிறைவடையாது என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி மீண்டும் ஒருபோதும் ஐ.தே.கவுக்கு செல்லமாட்டார் என்றும், ஜனாதிபதி மீண்டும் சிறிகொத்தவின் நிழலில் விழ வாய்ப்பில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago