2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சிறுமி தாயானார்: இளைஞர் கைதானார்

Janu   / 2023 நவம்பர் 30 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

15 வயது சிறுமியுடன் குடும்ப வாழ்க்கை நடத்தி வந்த 21 வயது இளைஞன் ஒருவரை வனாத்தவில்லுவ  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி கர்ப்பமாகியிருந்த நிலையில் ,  குழந்தையை பிரசவித்து புத்தளம் வைத்தியசாலையின் சிகிச்சை பெற்று வந்தபோது வைத்தியசாலை அதிகாரிகளால் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அதன்படி , புத்தளம் ஸ்மைல் புரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் போது , 2022 நவம்பரில் குறிப்பிட்ட  சிறுமியை வாகரைக்கு அழைத்துச் சென்று கணவன் மனைவியாக வாழ்ந்ததாகவும்  பின்னர் திரும்ப வனாத்தவில்லுவ பிரதேசத்திற்கு வந்து இருவரும் வாடகை வீட்டில் தங்கியிருந்ததாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X