2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சிறுமிக்குக் காதல் கடிதம் கொடுத்த ஆசிரியர்

Editorial   / 2023 ஜனவரி 11 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 8ஆம் தரத்தில் கல்வி கற்கும்  மாணவியொருவருக்கு 47 வயதான  ஆசிரியர் ஒருவர் காதல் கடிதம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம், உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் நகரில் உள்ள பாடசாலையொன்றில்

அக்கடிதத்தில் ” இதனைப்  படித்ததும் கிழித்து விட வேண்டும்,யாருக்கும் காட்டக் கூடாது, விடுமுறை நாட்களில் உன்னை மிஸ் செய்வேன் , விடுமுறை வருவதற்குள் என்னை வந்து சந்தித்து விடு” இவ்வாறு  எழுதப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அச்சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ள நிலையில்,பெற்றோர்  தனது மகளிடம் மன்னிப்பு கேட்குமாறு கோரியுள்ளனர். எனினும் இதற்கு மறுப்புத் தெரிவித்த ஆசிரியர் சிறுமியை இருக்கும் இடம் தெரியாமல் செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தமையை அடுத்து, குறித்த ஆசிரியர் மீது நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .