2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘சிறுவர் பூங்காவுக்கு தற்காலிகமாகப் பூட்டு’

Editorial   / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெயாங்கொடை – நைவல சிறுவர் விளையாட்டு பூங்காவிலிருந்த ஊஞ்சல் ஒன்று உடைந்து விழுந்து, தாயொருவரும் அவரது 13 வயது மகளும் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, குறித்த விளையாட்டு பூங்காவை தற்காலிகமாக மூடும்படி, அத்தனகல நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்ட நீதவான், பின்னர் இந்த உத்தரவை பிறப்பித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (04) இடம்பெற்ற இச்சம்பவத்தில் தாய் உயிரிழந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருடைய மகள், சிகிச்சை பலனின்றி இன்று (05) உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .