2026 மே 09, சனிக்கிழமை

சிறுவர்களைத் தாக்கும் புதிய வைரஸ்

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 29 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது நாட்டில் சிறுவர்களிடை​யே புதிய வகை வைரஸ் தொற்று ஒன்று பரவிவருவதாக கொழும்பு லேடி ரிஜ்வே  வைத்தியசாலையின் சிறுவர் நோய் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்போது சிறுவர்களுக்கு காய்ச்சல், வாய் மற்றும் கால்களில் சிவப்பு நிற பருக்கள், நாக்கில் புண் ஏற்படுதல்,உடலில் அரிப்பு, உடல் வருத்தம்என்பன இக்காய்ச்சலின் அறிகுறியென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இக்காய்ச்சால் பாதிக்கப்படும் சிறுவர்களுள் சிலருக்கு நகத்தோல் உரிவதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.

அத்துடன் சில சிறுவர்களுக்கு இவ்வைரஸ் ​தொற்று ஏற்பட்டாலும் காய்ச்சல் காணப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ள அவர், இத்தொற்று ஏற்புடும் சிறுவர்களை தனிமைபடுத்தி சுத்தமாக வைத்திருக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .