2026 மே 02, சனிக்கிழமை

சிறையிலிருந்து தப்பிச் சென்றவர் துப்பாக்கியுடன் கைது

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோகலை சிறைச்சாலையில் இருந்து தப்பிச்சென்ற கைதியொருவர், பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்த பொல்கஹவெல, ஒரலியத்த பகுதியில் வைத்து இன்று (12) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், அவர் மறைந்திருக்கு உதவி செய்த மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்திருந்த குறித்த சந்தேக நபர் துப்பாக்கி ஒன்றுடன் இவ்வாறு  கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

38 வயதுடைய குறித்த நபர் நாத்தாண்டியா, தப்போவ பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018.02.25 அன்று இடம்பெற்ற மனித கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 2018.12.20 அன்று கைதுசெய்யப்பட்டு நீதிமன்றின் ஊடாக கேகாலை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், 2019.02.09 அன்று தப்பிச்சென்றுள்ளார்.

சந்தேக நபரை பொல்கஹவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .