Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Janu / 2025 ஜூலை 03 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
சில்லறைகள் பற்றாக்குறையால், பயணத்துக்கான மிகுதி கட்டணங்களை பயணிகளுக்கு வழங்குவதில் பேருந்து நடத்துனர்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக இலங்கை தனியார் பயணிகள் போக்குவரத்து ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த முறை பேருந்து கட்டண திருத்தம் செய்யப்பட்டாலும், மிகுதி பணத்தை பயணிகளுக்கு செலுத்த அதிக அளவு சிறிய நாணயங்கள் தேவைப்படும் என்று சங்கத்தின் செயலாளர் குமாரதாச குளியாபிட்டிய தெரிவித்தார்.
குறைந்தபட்ச பேருந்து கட்டணமான 27 ரூபாய்க்கு பயணியொருவர் முப்பது ரூபாய் வழங்கினார் என்றால், மீகுதி மூன்று ரூபாயையும், 56 ரூபாய் கட்டணத்திற்கு அறுபது ரூபாய் செலுத்தினால், மீதமுள்ள பணமாக நான்கு ரூபாயையும் பயணிகளுக்கு வழங்க வேண்டும்
ஆனால் தற்போது ரூபாய், இரண்டு ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களுக்கு பெரும் பற்றாக்குறை உள்ளது, மேலும் சில சந்தர்ப்பங்களில் பத்து ரூபாய் நாணயங்கள் கூட பற்றாக்குறையாக உள்ளன என்று அவர் கூறினார்.
இந்த சூழ்நிலைகளைச் சமாளிக்க ப்ரீபெய்ட் கார்டு முறையை செயல்படுத்துமாறு கடந்த காலங்களில் அதிகாரிகளிடம் பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எனவே, தற்போதைய அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி, விரைவில் ப்ரீபெய்டு கார்டு முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மீதமுள்ள பணம் முறையாக வழங்கப்படவில்லை என்று பயணிகள் நீண்ட காலமாக புகார் அளித்து வருவதாகவும், வேலைக்குச் செல்லும் ஒருவருக்கு குறைந்தபட்ச ஊதியத்தின் கீழ் காலையில் முப்பது ரூபாயும், மாலையில் முப்பது ரூபாயும் வழங்கப்பட்டு மீதமுள்ள பணம் கிடைக்கவில்லை என்றால், அவர் ஒரு நாளைக்கு ஆறு ரூபாயை இழப்பார் என்றும், காலையிலும் மாலையிலும் ஐம்பத்தாறு ரூபாய் கட்டணமாக அறுபது ரூபாய் வழங்கப்பட்டு மீதமுள்ள பணம் கிடைக்கவில்லை என்றால், அவர் ஒரு நாளைக்கு எட்டு ரூபாயை இழப்பார் என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
28 minute ago
2 hours ago
2 hours ago