Nirosh / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை பூரணை தினமான நாளை (29) ஆரம்பமாகவுள்ளது. சிவனொளிபாதமலைக்கான புனித சின்னங்களை எடுத்துச்செல்லும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இரத்தினபுரி பெல்மதுளை கல்பொத்த ரஜமகா விகாரையிலிருந்து புனித விக்கிரகங்கள் நல்லதண்ணி பாதை வழியாக இன்று நள்ளிரவு மலையுச்சிக்கு எடுத்து செல்லப்படவுள்ளதாக பெங்கமுவே தம்மதின்ன தேரர் தெரிவித்தார்.
இதேவேளை சிவனொளிபாதமலையை தரிசிக்கச் செல்லும் அனைத்து மார்க்கங்களும் பொதுசுகாதார பரிசோதகர்களால் 24 மணிநேர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட உள்ளது.
மேலும், சிவனொளிபாதமலை பருவகால யாத்திரையில் ஒரே தடவையில் 200 பக்தர்களுக்கு மாத்திரமே அனுமதியளிக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாத்திரையில் பங்கேற்கும் அடியார்கள் தங்களது பிரதேச செயலகங்களில் பதிவு செய்வதுடன் தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதையும் பொதுசுகாதார பரிசோதகர்களால் உறுதிப்படுத்தப்பட்ட அனுமதி பத்திரமொன்றை தம்வசம் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எனினும், சிவனொளிபாதமலை பருவகால யாத்திரையில் பங்கேற்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு நுவரெலியா மாவட்ட செயலகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
34 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago