2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

’சிவப்பு ஸ்டிக்கர் குழு எங்கே’

Freelancer   / 2025 நவம்பர் 12 , மு.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவப்பு ஸ்டிக்கர் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை  நியமிக்க   இணக்கப்பாடு எட்டப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரையில் குழு நியமிக்கப்படவில்லை என கேள்வி எழுப்பிய  எதிர்க்கட்சிகளின்  பிரதம கொறடாவும் எம்.பி.யுமான கயந்த கருணாதிலக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என  சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (11) விசேட கூற்றை முன்வைத்தே  இவ்வாறு வலியுறுத்தினார். 

 தடுத்து வைக்கப்பட்ட நிலையில் சுங்கத்தில் இருந்து பரிசோதனை இன்றி விடுவிக்கப்பட்ட சிவப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில்  ஆராய பாராளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றை நியமிக்குமாறு   2025.10.07 ஆம் திகதி எதிர்க்கட்சி எம்.பி.க்கள்   சபாநாயகரான உங்களிடம் எழுத்து மூலமாக வலியுறுத்தினார்கள்.

 2025.10.10 ஆம் திகதியன்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தெரிவுக்குழு ஒன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு, 2025.10.17 ஆம் திகதியன்று பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் திகதி  குறிப்பிடப்படாமல் இந்த பிரேரணை உள்ளடக்கப்பட்டிருந்தது.

  சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிப்பு  விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை  நியமிக்க  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இணக்கப்பாடு எட்டப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில்,இதுவரையில் குழு நியமிக்கப்படவில்லை. ஆகவே கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் ஒரு தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த   சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, இந்த விடயம் குறித்து இவ்வாரம் நடைபெற உள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை எடுக்க முடியும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X