2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சீ.ஐ.டியில் தடுத்து வைத்து விசாரணை

Freelancer   / 2022 ஓகஸ்ட் 21 , பி.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

வசந்த முதலிகே உட்பட மூவர் மீதான விசாரணையை குற்றப் புலனாய்வு திணைக்களம் (சீ.ஐ.டி) பொறுப்பேற்றுள்ளதுடன், 72 மணி நேர தடுப்பு உத்தரவுகளின் கீழ் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிரான சதித்திட்டம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வசந்த முதலிகே, ஹசாந்த ஜீவந்த குணதிலக்க மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .