Kamal / 2019 செப்டெம்பர் 07 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட மாட்டார் என, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் தெரிவித்துள்ள அவர்,
அண்மையில் இடம்பெற்ற சுதந்திர கட்சி மாநாட்டில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நிகழ்த்திய உரையை பார்க்கும் போது அக்கட்சி தனியான ஒரு வேட்பாளரை களமிறக்காது என்ற நம்பிக்கை உள்ளதாகவும்,
அதேபோல் ரணில், கரு, சஜித் உள்ளிட்ட மூவருக்கும் சுதந்திர கட்சியின் ஆதரவு கிடைக்காதென தெரிவித்த அவர், சுதந்திர கட்சியை ஆதரிக்கும் இடதுசாரி மக்கள் அந்த தீர்மானத்தை விரும்பபோவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த கட்சி எடுக்கும் தீர்மானம் ஒருபோதும் ஐக்கிய தேசிய கட்சிக்கு சாதகமானதாக அமைந்திருக்காதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago