2025 மே 21, புதன்கிழமை

“சுகாதார பாதுகாப்பை அடிப்படை உரிமையாக சேர்க்கவும்”

S.Renuka   / 2025 மார்ச் 06 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடியுமை மற்றும் அரசியல் உரிமைகளைப் போலவே, சுகாதாரம் மற்றும் சுகாதார வசதிகளையும் அரசியலமைப்பில் அடிப்படை உரிமையாக சேர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசதெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு பட்ஜெட் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசியதாவது, அரசியலமைப்பு மனித உரிமைகள் பற்றிய குறுகிய வரையறையைக் கொண்டுள்ளது, அது குடிமை மற்றும் அரசியல் உரிமைகளை மட்டுமே கூறுகிறது.

இலங்கை அரசியலமைப்பில் சுகாதாரம் மற்றும் சுகாதார வசதிகளை அடிப்படை உரிமைகளாக சேர்க்க வேண்டிய நேரம் இது.

மேலும் அத்தகைய நடவடிக்கையில் எதிர்க்கட்சி அரசாங்கத்தை ஆதரிக்கும்.

அரசியலமைப்பில் திருத்தம் செய்வதன் மூலமோ அல்லது அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பில் அதைச் சேர்ப்பதன் மூலமோ இதைச் செய்யலாம். அதற்கு நாங்கள் எங்கள் முழு ஆதரவையும் வழங்குவோம்.

பொருளாதாரம், சமூகம், மதம், கலாச்சாரம், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய மனித உரிமைகள் பற்றிய பரந்த வரையறையை வழங்குவதும் முக்கியம் என்றும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .