2025 ஜூலை 16, புதன்கிழமை

சுகாதாரப் பரிந்துரைகளுக்கமைய கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானம்

Editorial   / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு கைத்தொழில் நிறுவனங்கள், விவசாய மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை முன்னர் போன்று முன்னெடுப்பதற்கு தேவையான பணிப்புரைகளை சுகாதார பணிப்பாளரின் ஊடாக உடனடியாக முன்வைக்குமாறு, ஜனாதிபதி மாகாண சுகாதார பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தேசிய பொருளாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நாளாந்த பொருளாதார செயற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்கக் கூடிய வாய்ப்புகளை கண்டறியும் நோக்குடன் மாகாண மட்டத்தில் தகவல்களை கேட்டறிவதற்கான விசேட சந்திப்பொன்று,  இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து மாகாண வைத்திய பணிப்பாளர்கள் உள்ளிட்ட சுகாதார துறை அதிகாரிகள் தமது மாகாணங்களின் தற்போதைய நிலைமை குறித்து இதன்போது ஜனாதிபதி விளக்கமளித்தனர். 

மாகாண மட்டத்தில் கிடைக்கப்பெறும் சுகாதார பரிந்துரைகளை கருத்திற்கொண்டு தற்போதைய கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து தீர்மானிக்கப்படும் என்பதுடன்;, நாளாந்த ஊதியம் பெறுவோரின் வாழ்வாதாரம் குறித்து விசேட கவனம் செலுத்துவதும் முக்கிய நோக்கமாகுமென, ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

நோய்த்தடுப்பு மத்திய நிலையங்களின் தற்போதைய நிலைமைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்தார்.
உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது, கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு அரசாங்கம் மேற்கொண்ட செயற்பாடுகள் மிகவும் பயனுறுதிவாய்ந்தவை என மாகாண சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

சுகாதார துறையின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிலைமைகளை மீளாய்வு செய்வதற்கு இதனை சந்தர்ப்பமாக ஆக்கிக்கொள்ளுமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .