Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 04 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தை மாற்றியமைக்கு எதிராக, சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டப்படி வேலைப் போராட்டத்தால், நாட்டுக்கு இதுவரை 12 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது என, இலங்கை சுங்க அதிகாரிகளின் ஒன்றிய அதிகாரியொருவர் தெரிவித்தார். இப்போ ராட்டத்தின் விளைவாக, நாட்டில் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளதென, இறக்குமதியோடு சம்பந்தப்பட்ட தரப்புகள் தெரிவித்தன.
போராட்டம் தொடர்பாக நேற்று (03) கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் உப தலைவர் அமில் சஞ்சீவ, திணைக்களத்தின் நாளாந்த வருமானமான 4 பில்லியன் ரூபாய், தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது எனத் தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, வெங்காயம், மருந்துகள், உறைந்த உணவுகள் ஆகியன, சுங்கத்தால் விரைவாகச் சோதிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன எனத் தெரிவித்த அவர், எனினும், அனுமதிக்கப்படும் அளவு குறைவடைந்துள்ளது எனத் தெரிவித்தார். தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கை, இறக்குமதிகளை மாத்திரம் பாதித்துள்ளது என்று தெரிவித்த அவர், தமது கோரிக்கை தொடர்பில் கவனமெடுக்கப்படாவிட்டால், ஏற்றுமதிகளும் பாதிக்கக்கூடும் என எச்சரித்தார்.
அனுமதிக்கப்படும் கொள்கலன்களின் எண்ணிக்கை, நாளொன்றுக்கு 1,500க்கும் 2,000க்கும் இடையில் காணப்பட்ட நிலையில், தற்போது அது நாளொன்றுக்கு 500 என்ற நிலைக்குக் குறைவடைந்துள்ளது எனத் தெரிவித்த அவர், இதன் காரணமாக, கொழும்புத் துறைமுகத்தின் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.
தமது பிரச்சினை தொடர்பாக நிதியமைச்சருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில், நாளை முதல், தமது போராட்டத்தை மேலும் அதிகரிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இறக்குமதியாளர்கள் ஒன்றியத்தின் பேச்சாளர் ஹேமக பெர்ணான்டோ, இந்நடவடிக்கை காரணமாக, அத்தியாவசியப் பொருள்களுக்குப் பாரதூரமான தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்துக் காணப்படுகிறது எனத் தெரிவித்தார். இந்நிலைமையைத் தடுப்பதற்காக, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
40 minute ago
1 hours ago
2 hours ago