2026 மே 02, சனிக்கிழமை

சுனாமிக்கு இன்றுடன் வயது 16

S. Shivany   / 2020 டிசெம்பர் 26 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

2004  ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி நாடே பெரும் சோக மயமானது. அன்றே பல உயிர்களை சுனாமி பேரலை காவு கொண்டது. இன்றைய நாளை அவ்வளவு இலகுவில் யாரும் மறந்துவிட முடியாது.

சுனாமி ஆழிப் பேரலையில் உயிர்நீத்த அனைத்து உயிர்களின் ஆத்ம சாந்திக்காக எமது தமிழ்மிரர் பிரார்த்திக்கிறது.

கடந்த 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தில் 35,000 க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 5,000 அதிமானோர் காணாமல் போயிருந்தனர்.

2004 ஆம் ஆண்டு இந்த அனர்த்தத்தின் பின்னர் டிசம்பர் 26 ஆம் திகதி இத்தினம் தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று காலை 9.25-9.27 வரை நாடளாவிய ரீதியில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .