Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜனவரி 22 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொது நிறுவனங்கள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக்குழுவான கோப் குழுவின் தலைவராக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
கோப் குழுவின் தலைவராக சுனில் ஹந்துனெத்தி கடமையாற்றி வந்த நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து, நாடாளுமன்றத்தின் கோப் குழு உள்ளிட்ட அனைத்து குழுக்களும் கலைக்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த 10ஆம் திகதி புதிய கோப் குழுவின் உறுப்பினர்கள் பெயரிடப்பட்டனர்.
இக் குழுவில் ரவூப் ஹக்கீம், ஹர்ஷ த சில்வா, அஜித் பீ. பெரேரா, வசந்த அலுவிஹார, ரஞ்சன் ராமநாயக்க, அசோக்க அபேசிங்க, அநுர பிரியதர்ஸன யாப்பா, சந்ரசிறி கஜதீர, மஹிந்தானந்த அளுத்கமகே, தயாசிறி ஜயசேகர, லக்ஷ்மன் செனவிரத்ன, ரவீந்ர சமரவீர, மாவை சேனாதிராஜா, மற்றும் சுனில் ஹந்துனெத்தி ஆகியோர் கோப் குழுவின் உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
13 minute ago
19 minute ago
21 minute ago