2026 மே 11, திங்கட்கிழமை

சுற்றுலா செல்வதற்கான சிறந்த தீவாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது

Editorial   / 2019 ஜூலை 14 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தாண்டு சுற்றுலா செல்வதற்கான சிறந்த தீவாக, இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் Travel + Leisure எனப்படும் சஞ்சிகையானது இந்தாண்டு சுற்றுலா மேற்கொள்வதற்கு உலகில் உள்ள  15 சிறந்த தீவுகளில் இலங்கைக்கு முதலிடத்தை வழங்கியுள்ளது.

இந்த சஞ்சிகையானது இலங்கையை முதற்தடவையாக இந்த வகைப்படுத்திலில் இணைத்துள்ளது.

இலங்கையின் கடற்கரைகள், தேசிய வனங்கள், தேயிலைத் தோட்டங்கள் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள், தங்குமிட வசதிகள் சிறப்பாக இலங்கையில் உள்ளதாக, அந்த சஞ்சிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.

பாலி, மாலைத்தீவு, பிஜி, ஹவாய் போன்ற தீவுகளை பின்தள்ளி இலங்கை முதலிடத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .