Nirosh / 2020 டிசெம்பர் 27 , பி.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக நாளை (28) மீண்டும் நாடு திறக்கப்பட உள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ், சுற்றுலாப் பயணிகளை அழைத்துவரும் முதலாவது விமானம் நாளை உக்ரைனிலிருந்து 200இக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு வருகிறது.
நாட்டில் ஏற்பட்டிருந்தக் கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அழைத்துவரும் செயற்பாடுகளை அரசாங்கம் கைவிட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு அழைத்துவரப்படும் சுற்றுலாப் பயணிகள், கட்டுநாயக்க, மத்தள சர்வதேச விமான நிலையங்களுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளை அழைத்துவரும் முதற்கட்ட வேலைத்திட்டம் வெற்றியடையும் பட்சத்தில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக சர்வதேச விமான நிலையங்களை திறப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
34 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago