Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Mithuna / 2024 பெப்ரவரி 12 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க உள்ளிட்ட நாடுகளை அடிக்கடி சூறாவளி காற்று தாக்கும். அப்போது திடீரென காற்று பூமியில் உள்ள மண்ணை எடுத்துக் கொண்டு அப்படியே சுழன்று அடிக்கும். அப்போது கையிறு திரித்தல் போன்று வான் அளவிற்கு அப்படியே செல்லும். அதேபோல் கடலில் சுறாவளி ஏற்பட்டாலும், திடீரென காற்று கடல் நீரை அவ்வாறு எடுத்துச் செல்லும்.
இது சூறாவளியின் போது நடப்பது சகஜம். ஆனால் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள கேஷவ்நகர் மற்றும் காரடி பகுதிகளில் திடீரென கொசுக்கள் இவ்வாறு சூறாவளி போன்று சுழன்று சென்றது அங்குள்ள மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு கொசுக்கள் மக்கள் வாழும் இடத்திற்குள் நுழைந்தால் என்ன ஆவது? என கேள்வி எழுப்பியதோடு, சுகாதாரம் குறித்து கவலை அடைந்தனர். மேலும், புனே நிர்வாகம் உடனடியாக கொசுக்களை கட்டுப்படும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
முலா முதா ஆற்றின் நீர் அளவு உயர்வு இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago