2025 மே 09, வெள்ளிக்கிழமை

சேவல் சண்டையால் ஏ.டி.எம்.களில் பணம் தட்டுப்பாடு

Mithuna   / 2024 ஜனவரி 17 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆந்திர மாநிலத்தில் சங்கராந்தி பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களாக சேவல் சண்டைகள் களை கட்டி உள்ளது. மாநிலம் முழுவதும் இந்த சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் அதனை மீறி போட்டிகள் நடத்தி வருகின்றனர்.

ஆந்திர மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வயல்வெளிகளில் பிரமாண்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு நூற்றுக்கணக்கான சேவல்கள் பங்குபெறும் சண்டைகள் நடத்தப்பட்டு வருகின்றனு.

காலில் கட்டப்பட்ட கத்தியுடன் சேவல்கள் ஆக்ரோஷமாக மோதின. ஒவ்வொரு சேவல்கள் மீதும் லட்ச கணக்கில் பணம் பந்தயமாக கட்டப்பட்டது.

இதற்காக சூதாட்ட மேஜைகள் அமைக்கப்பட்டிருந்தன . பணம் அதிகமாக கட்டப்பட்டதால் சேவல் சண்டை நடந்த பகுதிகளில்  ஏ.டி.எம்.மில் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டது. பல ஏ.டி.எம். மையங்கள் பணம் இல்லாமல் காலியாக கிடந்தன.

இதனை தவிர்க்க சேவல் சண்டை நடைபெற்ற இடங்களில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யவும் ஏற்பாடு செய்தனர் .அதன் மூலமாக பலர் பந்தயம் கட்டினர்.  ஒரே நாளில் சுமார் ரூ.500 கோடி வரை பணம் பந்தயமாக கட்டப்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X