Freelancer / 2025 ஜூன் 16 , மு.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தியோகபூர்வ பயணமாக பிரதமர் மோடி நேற்று சைப்ரஸ் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். சைப்ரஸ், கனடா, குரேஷியா ஆகிய நாடுகளில் அவர் 5 நாள் பயணம் மேற்கொள்கிறார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். டில்லியில் இருந்து நேற்று காலை 7 மணிக்கு ‘ஏர் இந்தியா ஒன்' தனி விமானத்தில் பிரதமர் மோடி சைப்ரஸ் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். 5 நாள் பயணமாக சைப்ரஸ், கனடா, குரேஷியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்.
முதல் கட்டமாக மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ் செல்லும் பிரதமர் மோடி இன்று அந்நாட்டு தலைவர்களை சந்தித்து, பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர், பிரதமர் மோடி கனடா செல்கிறார். கனடாவில் ஜி7 நாடுகளின் வருடாந்திர உச்சி மாநாடு 17, 18 ஆம் திகதிகளில் நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் பங்கேற்குமாறு கனடா பிரதமர் மார்க் கார்னி விடுத்த அழைப்பை ஏற்று மோடி அங்கு செல்கிறார். (a)

2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago