2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சொத்து தானம் செய்த தந்தை இப்ராஹிம்

Editorial   / 2019 ஏப்ரல் 26 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள மொஹமட் இப்ராஹிம் இன்ஸாட் அஹமட் என்பவர், சில வாரங்களுக்கு முன்னர், தனக்குச் சொந்தமான அனைத்துச் சொத்துக்களையும், தன்னுடைய பிள்ளைகள் மற்றும் சகோதரர்களின் பெயர்களுக்கு எழுதிவைத்துள்ளார் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தகவலளித்த இலங்கைத் தேசிய பௌத்த தேரர்கள் முன்னணி, இவ்வாறு சொத்துக்கள் பரிமாற்றம் செய்தமைக்கான ஆவணங்களை, நேற்று (25) கொழும்பில் நடத்திய ஊடகச் சந்திப்பின் போது பகிரங்கப்படுத்தியது.

வெல்லம்பிட்டி - அவிசாவளை வீதியில் அமைந்துள்ள 450 இலட்சம் ரூபாய் பெறுமதியான காணி, 100 இலட்சம் ரூபாய் பெறுமதியான தனியார் நிறுவனமொன்று, கொழும்பு - நாமல் வீதியில் அமைந்துள்ள 500 இலட்சம் ரூபாய் பெறுமதியான காணியொன்று, மாத்தளையில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்று என்பனவே, இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .