Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவின் படுகொலை தொடர்பான வழக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திலிருந்து அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவனின் உத்தரவுக்கு அமைய வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி தம்மிக கனேபொலவினால் இந்த வழக்கு விசேட மேல் நீதிமன்றத்குக்கு மாற்றப்பட்டுள்ளது.
பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட வழக்குகளை விசாரணை செய்வதற்காகவே அநுராதபுரம் விசேட மேல்நீதிமன்றம் நிறுவப்பட்டமையால் இந்த வழக்கும் அந்த நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு ஒக்டோபர் 6ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத்தாக்குதலில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 29 பேர் உடல் சிதறி பலியாகினர்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவருக்கு எதிராக கடுங்குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கின் இரண்டாவது பிரதிவாதி குற்றத்தை ஒப்புக்கொண்டமையால் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலைக்கும் தனக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லையென்று நீதிமன்றத்தில் தெரிவித்தமையால் அவர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago