2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஜெயராஜ் படுகொலை வழக்கு ஒத்திவைப்பு

Thipaan   / 2016 ஏப்ரல் 25 , பி.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே படுகொலை தொடர்பான வழக்கு, ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நிஷாங்க பந்துல கருணாரத்ன முன்னிலையில் நேற்றுத் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே அவர், மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

கம்பஹா வெலிவேரிய பகுதியில் உள்ள வெலிவேரிய காந்தி விளையாட்டு மைதானத்துக்கு முன்பாகவுள்ள வெலிவேரிய-புதிய கண்டி பிரதான வீதியில் வைத்து 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் திகதியன்று காலை 7.40க்கு இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் அமைச்சர் உட்பட 15 பேர் பலியானதுடன் 96 பேர் படுகாயமடைந்திருந்தனர்.

2008ஆம் ஆண்டு சிங்கள-தமிழ் புதுவருடத்தையொட்டி வெலிவேரிய அதிஸ்டான விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த விளையாட்டுப் போட்டியின் முன்னோடியாக அன்றையதினம் நடைபெறவிருந்த மரதன் ஓட்டப்போட்டியை ஆரம்பித்து வைப்பதற்கு அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே, பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

மரதன் ஓட்டப்போட்டியை ஆரம்பித்துவைக்கும் பொருட்டு அமைச்சரிடம் கொடி வழங்கப்பட்டது என்றும், ஆரம்ப ஸ்தானத்திலிருந்து மரதன் ஓட்டப்போட்டியை ஆரம்பித்து வைப்பதற்காக கொடியை கீழே அசைத்த போதே குண்டுவெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X