2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி - ஐ.தே.க.வினரிடையே இன்று சந்திப்பு

Kogilavani   / 2016 டிசெம்பர் 30 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், இன்று (29), முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதாக, ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டு வருவதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மேற்படி விடயத்தை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசெல்ல, ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

இது குறித்து, ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இன்று மாலை 4 மணியளவில், இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மேலும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .