Menaka Mookandi / 2016 டிசெம்பர் 15 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட இலங்கை உயர்மட்டக் குழுவொன்று, மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, இன்று வியாழக்கிழமை காலை, மலேசியாவுக்கு பயணமாகியது.
ஜனாதிபதியின் இந்த விஜயம் காரணமாக, மலேசியாவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலதிகப் பொலிஸ் படையணிகள், நகரின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், சில தினங்களாகவே, நகரின் அனைத்துப் பகுதிகளிலும் புலனாய்வு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, விசேட மேற்பார்வை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மலேசியாவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இலங்கைக்கு எதிரான சில ஆர்ப்பாட்;டங்களை முன்னெடுக்க, சில குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், அவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் காரணமாக, ஜனாதிபதியின் செயற்பாடுகள் பாதிக்கப்படப்போவதில்லை என்று, மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 7.50 மணியளவில், கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து, மலேசியா நோக்கிப் புறப்பட்ட ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர், சற்று முன்னர், கோலாலம்பூர் விமான நிலையத்தை அடைந்தனர் என்று, அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago