2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

ஜனாதிபதி மாளிகை வனப்பை 40 ஆயிரம் பேர் பார்வை

Kanagaraj   / 2016 ஜூன் 11 , மு.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் வனப்பை இதுவரையிலும் 40ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மாளிகை மற்றும் கோல்டன் பூங்கா ஆகியவை, பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்காக 8ஆம் திகதி புதன்கிழமையன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்துவைத்தார்.

எதிர்வரும் 14ஆம் திகதி வரை ஜனாதிபதி மாளிகையை, பிற்பகல் 2 மணிமுதல் 7 மணிவரையிலும்  பார்வையிடலாம். பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 15ஆயிரம் பேர் வரையிலும் நேற்று வெள்ளிக்கிழமை வருகைதந்திருந்தனர்.

29 ஆளுநர்கள் மற்றும் 6 ஜனாதிபதிகள், தமது கடமைப் பணிகளுக்காகவும் வாசஸ்தலமாகவும் பயன்படுத்தி வந்த இந்தக் கோட்டையும் கோல்டன் பூங்காவும், கடந்த 37 வருடங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்தது. பின்னர் அது, அரச உத்தியோகபூர்வ இல்லமாகப் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .