Freelancer / 2026 பெப்ரவரி 18 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்புக்கு இணங்க, AI Impact Summit 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக, இந்தியாவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அந்தநாட்டின் உயர்மட்ட அரசியல் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அத்துடன், மாநாட்டுக்கு வருகைதந்துள்ள ஏனைய நாட்டுத் தலைவர்களுடனும், முக்கிய கலந்துரையாடல்களில் ஜனாதிபதி ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவை மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 'AI Impact Summit 2026' மாநாடு புதுடில்லியில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை 19 ஆம் திகதி உரையாற்றவுள்ளார். (a)
6 minute ago
10 minute ago
10 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
10 minute ago
21 minute ago