2025 ஜூலை 07, திங்கட்கிழமை

’ஜனநாயகத்தை நிலைநாட்டத் தயார்’

Editorial   / 2018 நவம்பர் 24 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

போராட்டத்தினூடாக, நாட்டில் தலைதூக்கியுள்ள சர்வாதிகாரத்தைத் தோற்கடித்துவிட்டு, ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்கு தயாராக இருப்பதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (24) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.

அரசியல் நெருக்கடிகளை, நாடாளுமன்றத்தின் மூலம் தீர்த்துக்கொள்வதற்கு, தங்களது கட்சி தயாராக உள்ளது என்றும் அதற்கு மறுப்புத் தெரிவித்தால், வீதியில் போராட்டங்களை முன்னெடுத்தும் தீர்வைக் காணத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.

நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க இனமத பேதமின்றி மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் சகல மக்களின் ஒத்துழைப்பின் மூலமே நாட்டின் தற்போதைய சர்வாதிகார நிலைமையை மாற்றியமைக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .