2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

‘ஜனபலயவில் வழங்கப்பட்ட பால் பக்கட்டில் விஷம் இல்லை’

Editorial   / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 செப்டம்பர் மாதம்  5ஆம் திகதி ஒன்றிணைந்த எதிரணி ஏற்பாடு செய்திருந்த ஜனபலய எதிர்ப்பு பேரணியில் கலந்துக்கொண்டிருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட பாலில் எவ்வித விஷமும் கலக்கப்படவில்லையென, இரசாயண பகுப்பாய்வு  அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மாளிகாவத்தைப் பிரதேசத்தில் வைத்து வழங்கப்பட்ட குறித்த பால் பக்கட்டுகளை அருந்திய 25 பேர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விடயம் குறித்து வென்னப்புவ பிரதேசசபையின் உறுப்பினர் அலெக்ஸ் நிசாந்த 10ஆம் திகதி கோட்டை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைபாட்டுக்கு அமைய, அளுத்கடை இலக்கம் 3 நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கமைய, குறித்த பால் பக்கட்டுகள் கடந்த செப்டம்பர் மாதம் 13ஆம் திகதி அரச இரசாயண பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டு, இன்று அதன் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .