2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ், வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கா கேட்டரிங் நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட மிஹின் லங்கா தனியார் நிறுவனம் என்பன தொடர்பில், அவற்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து ஆராய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட, ஜனாதிபதி ஆணைக்குழவின் உத்தியோகப்பூர்வ பதவிக்காலம், 2019 ஆம் ஆண்டு  பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

2006  ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மேற்குறித்த நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டதுடன், அதன் கால எல்லை இம் மாதம் 31 ஆம்  திகதியுடன் நிறைவுப்பெறவுள்ளது.

இந்நிலையில், ஆணைக்குழு உறுப்பினர்களை இன்று (19) முற்பகல், ஜனாதிபதி செயலகத்துக்கு அழைத்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,விசாரணைகளில்   முன்னேற்றங்கள் தொடர்பில் கேட்டறிந்துக்கொண்டார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .