Editorial / 2019 செப்டெம்பர் 27 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த அரசாங்கத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெறாமையால், இந்த கோரிக்கை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
2015 - 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஜூலை மாதம் 22 ஆம் திகதியுடன் நிறைவு பெற்றது. எனினும், ஜனாதிபதியால் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
ஆணைக்குழுவிற்கு கிடைத்த 22 முறைப்பாடுகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
39 minute ago
41 minute ago
52 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
41 minute ago
52 minute ago
59 minute ago