2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

’ஜனாதிபதி இனியாவது செவிசாய்க்க வேண்டும்’

Editorial   / 2018 டிசெம்பர் 03 , பி.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால தடை உத்தரவை மதித்து, அந்த உத்தரவை கௌரவிக்கும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இனியாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் எம்.பி., தெரிவித்தார்.

பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் வழங்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி மேற்கொண்ட தவறைத் திருத்திக்கொண்டு, சட்டவிரோதமாக செயற்படுகின்ற காட்டரசுக்கு எதிராகவும், அவர்களால் அரச நிதிகள் செலவு செய்வதற்கு எதிராகவும் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் மற்றும் நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் வெற்றிபெற்ற பின்னரும் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் ஜனாதிபதி தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்து வருகிறார்” என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

எனவே, அரசமைப்புக்கு கட்டுப்பட்டு, தான் செய்த தவற்றை, ஜனாதிபதி திருத்திக்கொண்டு,  மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வழங்கிய இடைக்கால தடையுத்தரவுக்கு செவிசாய்த்து, பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளையும் ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி இனியாவது நடவடிக்கை  எடுப்பார் என நம்புகின்றோம்  என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .