2025 ஜூலை 07, திங்கட்கிழமை

’ஜனாதிபதி தவறிழைத்துவிட்டார்’

Editorial   / 2018 நவம்பர் 24 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மக்களின் ஆணையால் ஓரங்கட்டப்பட்ட ஒருவரை, மீண்டும் ஆட்சியில் அமர்த்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தவறிழைத்துவிட்டார் என, ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கண்டியில், இன்று (24) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

தேர்தலொன்றுக்கு முகங்கொடுப்பதற்கு, தான் அஞ்சவில்லை என்றும் ஆனால், நீதியான ஒரு அரசாங்கத்தின் கீழேயே, அத்தேர்தல் நடத்தப்படவேண்டும் என்றும்  அதற்காகவே போராடுவதாகவும் அவர் கூறினார்.

சபாநாயகர், யாருக்கும் வளைந்துகொடுக்காமல், நேர்மையாகச் செயற்பட்டமையாலேயே, உலகில், எந்தவொரு சபாநாயகரும் முகங்கொடுக்காத பிரச்சினைக்கு, சபாநாயர் முகங்கொடுத்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை நீடித்தால், வாக்குபலம் இல்லாம் போய், நாடாளுமன்றத்தின் பலம் குறைந்து, மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாவிடும் என்றும் அவர்களது உரிமைகளை பாதுகாப்பதற்காகவே தாம் செயற்படுவதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .